அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிக விமானங்களை வாங்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானச் சந்தையாக இந்தியா இருக்கும் என்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் இன்று விங்ஸ் இந்தியா நிகழ்வு தொடங்கி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியா கலந்துகொண்டு ஏர் இந்தியாவின் “ஏர்பஸ் A350”-ஐ அறிமுகப்படுத்தி வைத்து பேசுகையில், “2030-க்குள் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 200 ஆக உயரும்.
விமானப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்திய மாதங்களில் விமானத்தில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இண்டிகோ விமான நிர்வாகம் தனது விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் கிட்டத்தட்ட 500 விமானங்களை வாங்கி இருக்கிறது.
அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிக விமானங்களை வாங்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்படும் போயிங் மற்றும் ஏர்பஸ் விமான ஆர்டர்கள் அதிகரித்து வருகிறது. இண்டிகோ நிறுனம் 500 விமானங்களுக்கான ஆர்டர்களை வழங்கி இருக்கிறது.
மேலும், ஏர் இந்தியா 470 விமானங்களுக்கான ஆர்டர்களை வழங்கி இருக்கிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட ஆகாசா விமான நிறுவனம் 200-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கான ஆர்டரை வழங்கி இருக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு விமானப் பயணிகள் போக்குவரத்து 2030-ம் ஆண்டில் இரட்டிப்பாகும். 300 மில்லியனை எட்டும்.
2023-ம் ஆண்டில் விமானப் பயணிகள் போக்குவரத்து 153 மில்லியனாக இருந்தது. உள்நாட்டு விமானப் போக்குவரத்து, கோவிட் நோய்க்கு முந்தைய காலத்தில் பதிவு செய்யப்பட்ட உச்சத்தை தாண்டி இருக்கிறது.
கடந்த தசாப்தத்தில் உள்நாட்டு விமானப் பயணிகள் போக்குவரத்து கூட்டு வருடாந்திர வளர்ச்சி 15 சதவீதமாகவும், சர்வதேச அளவில் 6.1 சதவீதமாகவும் வளர்ச்சி கண்டிருக்கிறது. விமான நிலைய உள்கட்டமைப்பில் இந்திய அரசாங்கத்தின் அதிக முதலீடுகள் மற்றும் தேவை அதிகரித்துள்ள நிலையில், விருப்பமான செலவினங்களின் அதிகரிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இன்று இந்தியா உலகின் 3-வது பெரிய உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையாகவும், உலகின் 7-வது பெரிய சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்துச் சந்தையாகவும், உள்நாட்டு மற்றும் சர்வதேச இரண்டையும் இணைத்தால் உலகின் 5வது பெரிய சிவில் விமானச் சந்தையாகவும் இருக்கிறது. இது 2030-ம் ஆண்டு 3-வது இடத்தில் இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.