கடந்த பத்து ஆண்டுகளில் விவசாயிகளின் நலனை உறுதி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை!
Sep 12, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடந்த பத்து ஆண்டுகளில் விவசாயிகளின் நலனை உறுதி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை!

Murugesan M by Murugesan M
Jan 18, 2024, 05:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விவசாயிகளின் நலனை உறுதி செய்ய மத்திய அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

2013-14 ஆம் ஆண்டில் 27,662.67 கோடி ரூபாயாக இருந்த வேளாண்மை மற்றும் கூட்டுறவுத் துறைக்கான நிதி ஒதுக்கீடு 2023-24 ஆம் ஆண்டில் 1,25,035.79 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

‘கடந்த 5 ஆண்டுகளில் வேளாண் அமைச்சகம் தமக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் ஒரு லட்சம் கோடி ரூாபயை  திரும்ப ஒப்படைத்துவிட்டது’ என்ற  தலைப்பில் ஒரு செய்தித்தாளில் கட்டுரை வெளிவந்துள்ளது.

அமைச்சகத்திடம் எந்த விளக்கமும் கேட்காமல், இந்தக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. வேளாண் துறையில் அரசின் சாதனைகளை இந்த கட்டுரை முன்னிலைப்படுத்தவில்லை.

உண்மையில், விவசாயிகளின் நலனை உறுதி செய்ய அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வேளாண்மை மற்றும் கூட்டுறவுத் துறைக்கான வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீடு பல மடங்கு அதிகரித்துள்ளது.

2013-14 ஆம் ஆண்டில் 27,662.67 கோடி ரூபாயாக இருந்த நிதி-ஒதுக்கீடு 2023-24 ஆம் ஆண்டில் 1,25,035.79 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 80% முதல் 85% வரை பங்களிக்கும் மூன்று முக்கிய மத்திய துறை திட்டங்கள் உள்ளன. பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதியுதவித் திட்டத்தில் 30.11.2023 நிலவரப்படி 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகள்  பயன்பெறுகின்றனர்.

நேரடி பரிமாற்றம் (DBT) மூலம் இதுவரை ரூ.2.81 லட்சம் கோடிக்கு மேல் விடுவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம்  (PMFBY) 2016-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

கடந்த 7 ஆண்டுகளில் 49.44 கோடி விவசாயிகள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 14.06 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் ரூ.1,46,664 கோடிக்கு மேல் காப்பீட்டுத் தொகை பெற்றுள்ளனர்.

2013-14-ம் ஆண்டில் 7.3 லட்சம் கோடி ரூபாயாக இருந்த வேளாண் துறைக்கான நிறுவனக் கடன் 2022-23-ம் ஆண்டில் 21.55 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கே.சி.சி மூலம் சலுகை கடனின் பயன் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வள விவசாயிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட மூன்று முக்கிய மத்திய அரசுத் திட்டங்களும் தகுதி வாய்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.

Tags: agriculturecentral goverment
Share
Tweet
SendShare
Previous Post

ஆசியக் கோப்பை கால்பந்து : வெற்றி பெறுமா இந்தியா?

Next Post

2030-க்குள் இந்தியா உலகின் 3-வது பெரிய விமான சந்தையாக இருக்கும்: மத்திய அமைச்சர்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies