ராமரை வரவேற்க காஷ்மீரி பெண் ஒருவர் பஹாரி மொழியில் ராம் பஜனைப் பாடலைப் பாடிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் இன்னும் மூன்று நாட்களில் நடைபெறவுள்ளது.
இந்த வரலாற்று நிகழ்வை குறிக்கும் வகையில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கொண்டாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது ராமரை வரவேற்க காஷ்மீரி பெண் ஒருவர் பாடிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. படூல் ஜெஹ்ரா என்ற இளம் காஷ்மீரி பெண், பஹாரி மொழியில் ராம் பஜனைப் பாடலைப் பாடுகிறார். ராமர் வருகையை வரவேற்று உள்ளூர் மொழியில் அவர் பாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை மத்திய தகவல் ஒளிபரப்பு, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
जब पूरा देश राममय हो चला हो तो स्वर्ग से भी सुंदर कश्मीर कैसे पीछे रहे..
कश्मीर की बेटी बतूल जेहरा ने प्रभु श्री राम के स्वागत में स्थानीय भाषा में सुन्दर गीत गाते हुए, कितना सुंदर संदेश दिया है। कश्मीर का युवा अब तोड़ने की नहीं, जोड़ने की बातें कर रहा है।
बदलाव, जो मोदी राज… pic.twitter.com/zfL8tacxgo
— Anurag Thakur (@ianuragthakur) January 15, 2024
அதில், “நாடு முழுவதும் ராமர் பண்டிகையைக் கொண்டாடும் போது, சொர்க்கத்தை விட அழகான காஷ்மீர் எப்படி பின் தங்கும்? காஷ்மீரின் மகள் படூல் ஜெஹ்ரா, பகவான் ஸ்ரீ ராமரை வரவேற்க உள்ளூர் மொழியில் ஒரு அழகான பாடலைப் பாடி அழகான செய்தியை வழங்கினார்.
காஷ்மீர் இளைஞர்கள் இப்போது ஒற்றுமையைப் பற்றி பேசுகிறார்கள், பிரிவினையைப் பற்றி அல்ல. மோடி நிர்வாகத்தில் மாற்றம் தெளிவாகத் தெரிகிறது,” என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.