சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் தொழில்முனைவு மற்றும் கிராமப்புற மேம்பாட்டு மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி இளம் தொழில்முனைவோரை சந்தித்து விரிவாக கலந்துரையாடினார்.
பல்வேறு நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே ஆளுநர் ஆர். என். ரவி, ஆற்றிய உரையில்,
நமது தேசம் சந்தித்து வரும் வியத்தகு மாற்றத்தை கோடிட்டுக் காட்டினார். மேலும், மாறிவரும் உலகை உள்வாங்கிக் கொள்ளவும், தொழில்முனைவோர் கொள்கை கட்டமைப்பு, ஸ்டார்ட்அப் சூழல் குறித்து விழிப்புடன் இருக்கவும் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
தனிப்பட்ட உதாரணம் மூலம் புத்திசாலித்தனமான இளம் மனங்களை வழிநடத்துமாறு வலியுறுத்தினார். இந்த ஆராய்ச்சி மையம் ஆக்கபூர்வ, திறமையான, நம்பிக்கையான மற்றும் லட்சியம் வாய்ந்த புதிய இந்தியாவின் எழுச்சியை பிரதிபலிக்கிறது எனத் தெரிவித்தார்.