உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை அனைத்து இரயில் நிலையங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், மிக பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.
இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் வகையில், நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், ஆன்மீக பெரியவர்கள், திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.
இந்நிலையில், வரலாற்று சிறப்புமிக்க இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை, நாடு முழுவதும் உள்ள இரயில் நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறைந்தது 9 ஆயிரம் திரைகளில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் ஜனவரி 22-ஆம் தேதி அரை நாள் விடுமுறை அளித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.