4-வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை நிராகரித்த கெஜ்ரிவால்: பா.ஜ.க. கடும் விமர்சனம்!
Sep 12, 2026, 02:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

4-வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை நிராகரித்த கெஜ்ரிவால்: பா.ஜ.க. கடும் விமர்சனம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 18, 2024, 07:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக, அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 4-வது முறையாக ஆஜராகாத நிலையில், அவர் அச்சமடைந்திருப்பதாக பா.ஜ.க. விமர்சனம் செய்திருக்கிறது.

டெல்லியில் 2-வது முறையாக ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி அரசு 2021-ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றன.

இவ்வழக்கு தொடர்பாக, அம்மாநில முன்னாள் துணை முதல்வரும், கலால் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, புதிய மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, இது தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

3 முறை சம்மன் அனுப்பப்பட்டும், அரசியல் உள்நோக்கத்துடன் சம்மன் அனுப்பப்பட்டதாகக் கூறி கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. ஆகவே, 4-வது முறையாக ஜனவரி 18-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்னுக்கும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

இதனிடையே, இன்று செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், “அமலாக்கத்துறை எனக்கு 4-வது முறையாக சம்மன் அனுப்பி இருக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பு ஏன் திடீரென எனக்கு சம்மன் அனுப்புகிறார்கள்? நான் பிரச்சாரம் செய்வதை தடுப்பதே அவர்களின் நோக்கம்” என்று கூறியிருக்கிறார்.

இந்த நிலையில்தான், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்த விரும்புவதால் அரவிந்த் கெஜ்ரிவால் அச்சமடைந்திருக்கிறார் என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா விமர்சனம் செய்திருக்கிறார். இது குறித்து கவுரவ் பாட்டியா கூறுகையில், “அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 4-வது முறையாக சம்மன் அனுப்பி அவரை விசாரிக்க விரும்பியது.

ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் பயந்து போனது ஏன்? அவர் அச்சமடைந்திருக்கிறார். சிறையில் இருக்கும் குற்றவாளி யார் என்பது இப்போது உங்களுக்குத் தெரியும். முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் எம்.பி. சஞ்சய் சிங்கை தொடர்ந்து கெஜ்ரிவாலும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். கெஜ்ரிவாலின் டி.என்.ஏ.வில் அராஜக குணம் உள்ளது” என்று கூறியிருக்கிறார்.

Tags: Enforcement DirectorateArvind Kejriwaldelhi cmsummonedBJP attack
Share
Tweet
SendShare
Previous Post

கர்நாடகாவில் ஸ்ரீராமர் பேனரை கிழித்த நபர் கைது!

Next Post

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம்: இரயில் நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies