‘தை மாதம் தமிழகத்தில் சூழ்ந்திருக்கும் இருள் நீங்கி ஒளி பிறக்க போகிறது என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன்,
‘தை மாதம் தமிழகத்தில் சூழ்ந்திருக்கும் இருள் நீங்கி ஒளி பிறக்க போகிறது. அயோத்தி ராமர் கோயில் தொடர்பாக அமைச்சர் உதயநிதி கூறிய கருத்து திமுகவின் பிற்போக்குத்தனத்தை காட்டுகிறது.
அயோத்தி ராமர் கோயில் 500 ஆண்டு கால கனவு. லட்சியம், தியாகங்கள் நிறைவேறி, எதிர்பார்ப்புகளுடன் வருகிற 22-ம் தேதி திருவிழா நடைபெற உள்ளதை இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். பிற்போக்குத்தனமாக பேசும் திமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள்’’ என்றார்.