வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக, பாரத பிரதமர் நரேந்திர மோடி கடுமையான விரதங்களை பின்பற்றி வருகிறார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், மிக பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.
இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் வகையில், நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், ஆன்மீக பெரியவர்கள், திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கு ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.
இந்நிலையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக, பாரத பிரதமர் நரேந்திர மோடி கடுமையான விரதங்களை பின்பற்றி வருகிறார்.
இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 11 நாட்களுக்கு சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பிராண பிரதிஷ்டையில் பங்கேற்பதால், பிரதமர் நரேந்திர மோடி, விரதங்கள் மேற்கொண்டு வருகிறார். இதன்படி பிரதமர், தரையிலேயே உறங்குகிறார். இளநீர் மட்டுமே குடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பல பணிகள் இருந்தபோதும், இந்த கடினமான விரதங்களை மேற்கொண்டு வருகிறார். இந்த உபவாசங்கள், நியமங்கள், தவம், ஒருவருடைய மனம் மற்றும் உடலை தூய்மைப்படுத்துவதாக கூறப்படுகிறது.
இந்த நியமங்களின்படி, சாத்வீகமான உணவுகளையே எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது, வெங்காயம், பூண்டு உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற பல நியமங்கள் உள்ளன. இளநீர் குடித்து, மிகக் கடுமையான விரதத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டுள்ளார்.