நீதிமன்றம் அதிரடி: அரசு பங்களாவை காலி செய்த திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா!
Mar 15, 2026, 02:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதிமன்றம் அதிரடி: அரசு பங்களாவை காலி செய்த திரிணாமுல் எம்.பி. மஹுவா மொய்த்ரா!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 19, 2024, 01:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லோக்சபாவில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, அரசு பங்களாவை காலி செய்யும்படி அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, மஹுவா மொய்த்ரா அரசு பங்களாவை காலி செய்தார்.

மேற்குவங்க மாநிலத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹுவா மொய்த்ரா. கிருஷ்ணா நகர் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யாக இருந்தார். இவர், அதானி குழுமத்தையும், பிரதமர் மோடியையும் தொடர்புபடுத்தி மக்களவையில் கேள்வி எழுப்புவதற்காக, மற்றொரு தொழிலதிபரிடமிருந்து லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.

இது குறித்து பா.ஜ.க. எம்.பி. நிஷாந்த் துபே நாடாளுமன்றத்தில் புகார் செய்தார். இதையடுத்து, இந்த புகார் குறித்து நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரித்தது. அப்போது, லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டதால், அவரை தகுதி நீக்கம் செய்யும்படி ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரை செய்தது. ஆகவே, மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, புதுடெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்யும்படி, மஹுவா மொய்த்ராவுக்கு மக்களவை செயலகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், அரசு எஸ்டேட் இயக்குநரகமும் கடந்த 7 மற்றும் 12-ம் தேதிகளில் 2 நோட்டீஸ்கள் அனுப்பியது. ஆனாலும், மஹுவா மொய்த்ரா அரசு பங்களாவை காலிசெய்யவில்லை.

எனவே, வீட்டைக் காலி செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த வாரம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போதும் வீட்டைக் காலி செய்ய மறுத்த மஹுவா மொய்த்ரா, நோட்டீஸை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அரசு வீட்டை காலி செய்ய அவகாசம் கோரினார்.

ஆனால், அந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமணியன் பிரசாத், மஹுவா மொய்த்ரா கோரிக்கையை ஏற்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, வீட்டைக் காலி செய்ய வைக்க குழு ஒன்று அவரது வீட்டிற்குச் அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே, டெல்லியில் உள்ள அரசு பங்களாவை மஹுவா மொய்த்ரா காலி செய்தார்.

Tags: delhi high courtTMC MP Mahua MoitraRefuses Eviction OrderVacates Govt Bungalow
ShareTweetSendShare
Previous Post

டிச.21-ல் மண்டல-மகரவிளக்கு பூஜை காலம் நிறைவு!

Next Post

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய கோவில்களுக்கு சென்று பிரதமர் மோடி பிரார்த்தனை செய்ய உள்ளார்!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies