பாதையை மாற்றிய ராகுல்: வழக்குப் போட்ட போலீஸ்!
Sep 10, 2026, 09:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாதையை மாற்றிய ராகுல்: வழக்குப் போட்ட போலீஸ்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 19, 2024, 01:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அஸ்ஸாமில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின்போது, அனுமதி வழங்கப்படாத சாலையில் பயணம் மேற்கொண்டதாக காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி மீது போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமானவர் ராகுல் காந்தி. இவர், 2022-ம் ஆண்டு பாரத் ஜோடோ எனப்படும் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி 2023 ஜனவரியில் நிறைவு செய்தார்.

தொடர்ந்து, இந்த ஆண்டு 2-வது கட்டமாக ‘பாரத் ஜோடோ நியாய’ யாத்திரை எனப்படும் இந்திய ஒற்றுமை மற்றும் நீதிக்கான யாத்திரையை கடந்த 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கினார். இந்த யாத்திரை, 15 மாநிலங்களில் 67 நாட்கள் 6,712 கி.மீ. தூரம் நடைபெற உள்ளது. இந்த யாத்திரை மார்ச் 20-ம் தேதி மும்பையில் நிறைவடைகிறது.

இந்த நிலையில், அஸ்ஸாம் மாநிலத்தில் இந்த யாத்திரைக்கு ஜோர்ஹட் மாவட்டம் கே.பி. சாலையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், ராகுல் காந்தியோ வேறு சாலை வழியாக அத்துமீறி யாத்திரை சென்று, அங்கிருந்த மக்களை சந்தித்து உரையாடினார்.

ராகுல் காந்தி வந்திருப்பதை அறிந்த மக்கள், அவரை பார்ப்பதற்காக முண்டியடித்துக் கொண்டு சென்றனர். இதனால் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது, சிலர் மயங்கி விழுந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, அனுமதிக்கப்பட்ட பாதையில் செல்லாமல், அத்துமீறியதாக ராகுல் காந்தி மீது ஜோர்ஹட் சதார் காவல் நிலைய போலீஸார் சூமோட்டோ எஃப்.ஐ.ஆர். எனப்படும் தாமாக முன்வந்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருக்கிறார்கள்.

Tags: rahul gandhiBharat Jodo Nyaya YatraCase against
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடிக்கு கிருஷ்ணர் ஓவியத்தை பரிசளித்த இஸ்லாமிய பெண்!

Next Post

ராமரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சிலைகள்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies