19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சு தேர்வு.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடர் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தொடக்க நாளான இன்று மொத்தமாக இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அதில் அமெரிக்கா – அயர்லாந்து அணிகள் விளையாடும் போட்டி தென் ஆப்பிரிக்காவில் மங்காங் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் அமெரிக்கா பேட்டிங் செய்து வருகிறது.
அமெரிக்கா வீரர்கள் :
பிரணவ், ஆர்யமான் சூரி, சித்தார்த், ஸ்ரீவஸ்தவா, ரிஷி ரமேஷ் ( கேப்டன் ), ஆதீந்திர சுப்ரமணியன், பார்த் படேல், குஷ் பாலாலா, ஆர்யா கர்க், ராயன் பாகனி, அமோக் ரெட்டி.
அயர்லாந்து வீரர்கள் :
ஜோர்டான் நீல், ரியான் ஹண்டர், கவின் ரோல்ஸ்டன், கியான் ஹில்டன், பிலிப்பஸ் லே ரூக்ஸ் ( கேப்டன் ), ஸ்காட் மேக்பெத், ஜான் மெக்னலி, ஹாரி டயர், கார்சன் மெக்கல்லோ, ஆலிவர் ரிலே, ரூபன் வில்சன்