சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவல்லாவுக்கு அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராம் ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.
அன்றைய தினம் நண்பகல்12.45 மணியளவில் கர்ப்ப கிரகத்தில் மூலவரான குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் வகையில் நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.
அந்த வகையில் தற்போது சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவல்லாவுக்கு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை சார்பில், ஆர்.எஸ் எஸ் நிர்வாகிகள், அயோத்தி கும்பாபிஷேக அழைப்பிதழ், ஸ்ரீராமர் படம், அட்சதை வழங்கினர்.