"ஒரே நாடு ஒரே தேர்தல்": சட்ட நிபுணர்களுடன் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை!
Mar 15, 2026, 08:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“ஒரே நாடு ஒரே தேர்தல்”: சட்ட நிபுணர்களுடன் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 19, 2024, 06:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டிருக்கும் உயர்மட்டக்குழுவின் தலைவர் ராம்நாத் கோவிந்த், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

நாடாளுமன்றம் மற்றும் நாட்டிலுள்ள அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய பா.ஜ.க. அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஏனெனில், இதனால் வீண் விரையம் தவிர்க்கப்படுவதோடு, தேர்தல் அலுவலர்களின் நேரமும் மிச்சமாகும் என்பது மத்திய அரசின் எண்ணம்.

ஆகவே, ஒரே நாடு ஒரே தேர்தல் எந்தளவுக்கு சாத்தியம் என்பது குறித்து ஆராய்வதற்காக, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றையும் மத்திய பா.ஜ.க. அரசு அமைத்தது.

இக்குழுவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, முன்னாள் எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதிக் கமிஷன் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் டாக்டர் சுபாஷ் சி காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இவர்களில் எதிர்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மட்டும் குழுவில் பங்கேற்க மறுப்புத் தெரிவித்து விட்டார். இக்குழு இதுவரை 2 முறை கூடி ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா என்பது குறித்து ஆலோசனை நடத்தியது.

மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து நாட்டு மக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என்றும் சமீபத்தில் அறிவித்திருந்தது. அதேபோல, அரசியல் கட்சிகள் மற்றும் புகழ்பெற்ற சட்ட வல்லுநர்களிடமிருந்தும் ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் கோரப்படுவதாக சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், “ஒரே நாடு ஒரே தேர்தல்” தொடர்பாக, உயர்மட்டக் குழுவின் தலைவர் ராம்நாத் கோவிந்த், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

தொடர்ந்து, இன்று டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோர்லா ரோகினி மற்றும் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து உயர்மட்டக் குழுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறுகையில், “இந்த ஆலோசனை செயல்முறை வரும் நாட்களிலும் தொடரும். இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள் மற்றும் கருத்துகள் ஏற்கெனவே கேட்கப்பட்டிருக்கின்றன.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதிகள் உட்பட புகழ்பெற்ற நீதிபதிகள், அரசியலமைப்பு வல்லுநர்கள் மற்றும் முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் உட்பட பலரிடம் கருத்துக் கேட்டு அணுகப்பட்டிருக்கிறது.

இக்குழு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை 2 கூட்டங்களை நடத்தி இருக்கிறது. மேலும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துகளையும், பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட தேதியில் தொடர்பு கொள்ளுமாறும் சமீபத்தில் கடிதம் எழுதி இருந்தது. பின்னர் கட்சிகளுக்கு நினைவூட்டல் அனுப்பி இருந்தது” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: one nation one electioncommitteeConsultLegal Experts
ShareTweetSendShare
Previous Post

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : இந்திய வீரர் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

Next Post

ரூ.103 கோடி… 11 தொழில்நுட்ப ஜவுளி திட்டம்… ஜவுளி அமைச்சகம் ஒப்புதல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies