19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அமெரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடர் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தொடக்க நாளான நேற்று மொத்தமாக இரண்டு போட்டிகள் நடைபெற்றன. அதில் அமெரிக்கா – அயர்லாந்து அணிகள் விளையாடும் போட்டி தென் ஆப்பிரிக்காவில் மங்காங் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 40 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 105 ரன்களை மட்டுமே எடுத்தது.
அமெரிக்காவில் அதிகபட்சமாக குஷ் பாலாலா 22 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதற்கடுத்து அதிகபட்சமாக பார்த் படேல் 13 ரன்களை எடுத்துள்ளார். அமோக் ரெட்டி 11 ரன்களை எடுத்தார்.
மற்ற வீரர்கள் அனைவரும் ஒரு இலக்க எண்ணில் ஆட்டமிழந்தனர். இந்த மோசமான பேட்டிங்கால் அமெரிக்கா 40வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 105 ரன்களை மட்டுமே எடுத்தது.
அயர்லாந்தில் அதிகபட்சமாக ரூபன் வில்சன், ஆலிவர் ரிலே ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். ஜான் மெக்னலி 2விக்கெட்களை வீழ்த்தினார்.
கார்சன் மெக்கல்லோ, ஸ்காட் மேக்பெத் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனால் அயர்லாந்து 106 என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து அணி 23வது ஓவரில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதில் தொடக்க வீரராக களமிறங்கிய ஜோர்டான் நீல் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவருடன் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய ரியான் ஹண்டர் 50 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கியான் ஹில்டன் 23 ரன்களை அடித்து ஆட்டமிழக்க, பிலிப்பஸ் லே ரூக்ஸ் 23 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்கமால் இருந்தார். இதனால் 23வது ஓவரில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
அமெரிக்கா அணி சார்பில் ஆர்யா கர்க் 2 விக்கெட்களையும், குஷ் பாலாலா 1 விக்கெட்டையும் எடுத்தனர். இதனால் அயர்லாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.