பிஸ்கட்டுகளால் வடிவமைக்கப்பட்ட ராமர் கோயில் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் இன்னும் மூன்று நாட்களில் நடைபெறவுள்ளது.
இந்த வரலாற்று நிகழ்வைக் குறிக்கும் வகையில் உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கொண்டாடும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது பிஸ்கட்டுகளால் வடிவமைக்கப்பட்ட ராமர் கோயில் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேற்கு வங்க மாநிலம், துர்காபூர் பகுதியைச் சேர்ந்த சோதான் கோஷ் என்ற நபர், பார்லே ஜி பிஸ்கட்டுகளைக் கொண்டு 4-க்கு 4 அடி என்ற அளவில் ராமர் கோயில் மாடலை உருவாக்கி அனைவரையும் அசத்தியுள்ளார்.
சுமார் 20 கிலோ பிஸ்கட்டுகளைக் கொண்டு இந்த மாடல் கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. சோதான் கோஷ் மற்றும் அவரது நண்பர்களின் கூட்டு முயற்சியில் 5 நாட்களில் இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது.
தெர்மாகோல், பிளைவுட் ஆகியவற்றுடன் பிஸ்கட்களையும் பயன்படுத்தி இந்த ராமர் கோயில் மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது.