பாரத பிரதமர் நரேந்திர மோடி பீகாரைச் சேர்ந்த பிரபல பாடகி மைதிலி தாக்கூரை அவரின் ‘ஷப்ரி’ என்ற பாடலுக்காகப் பாராட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராம் ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.
இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பீகாரைச் சேர்ந்த பிரபல பாடகி மைதிலி தாக்கூரை பாராட்டியுள்ளார். மைதிலி தாகூர் தனது பாரம்பரிய பீகாரி பாடல்களுக்காக அறியப்பட்டவர்.
இவர் ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ‘மா ஷப்ரி’ என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் ராமரின் வனவாச கதையை நினைவு கூறும் விதமாக அமைந்துள்ளது.
अयोध्या में प्राण-प्रतिष्ठा का अवसर देशभर के मेरे परिवारजनों को प्रभु श्री राम के जीवन और आदर्शों से जुड़े एक-एक प्रसंग का स्मरण करा रहा है। ऐसा ही एक भावुक प्रसंग शबरी से जुड़ा है। सुनिए, मैथिली ठाकुर जी ने किस तरह से इसे अपने सुमधुर सुरों में पिरोया है।
— Narendra Modi (@narendramodi) January 20, 2024
இந்த பாடலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பீகாரைச் சேர்ந்த பாடகி மைதிலி தாகூரைப் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர், ” என் குடும்பம் ஆகிய நம் பாரத மக்கள் அனைவர்க்கும், அயோத்தியில் நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழா, ராமரின் வாழைக்காயை நினைவூட்டும் விழாவாக உள்ளது. அப்படி ஒரு உணர்ச்சிக்கட்டமான நிகழ்வை ‘ஷப்ரி’ பாடல் நினைவூட்டுகிறது. இந்த பாடலை தனது மெல்லிசையால் மைதிலி தாக்கூர் எப்படி பாடியுள்ளார் என்று கேளுங்கள்”எனப் பதிவிட்டுள்ளார்.