19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் விளையாடவுள்ளது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடர் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் மொத்தமாக 16 அணிகள் கலந்துகொள்ள உள்ளனர். இந்த தொடர் முதலில் இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை ஐசிசி இடைநீக்கம் செய்ததனால் இந்த தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ளது.
இந்த தொடரில் கலந்து கொள்ளும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ-வில் நடப்புச் சாம்பியன் இந்தியா, அமெரிக்கா, அயர்லாந்து, வங்காளதேசம் அணிகள் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இன்றைய நாள் மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. அதில் இந்தியா – வங்கதேசம் ; இங்கிலாந்து – ஸ்காட்லாந்து ; பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையே போட்டிகள் நடைபெறவுள்ளன.
இதில் இந்தியா – வங்கதேசம் அணிகள் மோதும் போட்டி தென் ஆப்ரிக்காவின் ப்ளூம்ஃபோன்டைனில் உள்ள மங்காங் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்திய அணியை பஞ்சாப் இந்திய அணியை பஞ்சாப்பை சேர்ந்த உதய் சாஹரன் வழிநடத்துகிறார். ஆதர்ஷ் சிங், ஆரவெல்லி அவினாஷ் ராவ், சச்சின் தாஸ், இன்னேஷ் மஹாஜன், பிரியன்ஷூ மொலியா, ருத்ரா பட்டேல், அர்ஷின் குல்கர்னி, முஷீர்கான், முருகன் அபிஷேக், தனுஷ் கவுடா, ராஜ் லிம்பானி, சாமி குமார் பாண்டே, ஆரத்யா சுக்லா, நமன் திவாரி ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
மேலும் இப்போட்டியானது இந்திய நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்குகிறது.