அயோத்தி "போலி" பிரசாதம்: அமேசானுக்கு மத்திய நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்!
Aug 7, 2025, 10:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி “போலி” பிரசாதம்: அமேசானுக்கு மத்திய நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்!

Web Desk by Web Desk
Jan 20, 2024, 03:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமர் கோவில் பிரசாதம் என்ற தவறான பெயரில் இனிப்புகளை விற்பனை செய்ததாக, அமேசான் நிறுவனத்துக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக 1,800 கோடி ரூபாயில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம், இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா ஆகியவை வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பிரான் பிரதிஷ்டை செய்கிறார்.

மேலும், ஏராளமான வி.வி.ஐ.பி.க்களும் விழாவில் கலந்துகொள்கிறார்கள். ஆகவே, கோவிலில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். எனவே, இவ்விழாவுக்கு பக்தர்கள் வரவேண்டாம் என்றும், விழா முடிந்த பிறகு கோவிலுக்கு வந்து இராம் லல்லாவை தரிசிக்கும்படியும் கோவில் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

அதோடு, அயோத்தி இராமர் கோவில் பிரான் பிரதிஷ்டையின்போது பயன்படுத்தப்படும் இனிப்பு வகைகள், ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கிறது. இதற்கான ஆன்லைன் முகவரி, பணம் செலுத்த வேண்டிய விவரம் ஆகியவையும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில், ஆன்லைன் வர்த்தகத்தில் பிரபலமான அமேசான் நிறுவனம், ‘ஸ்ரீராம் மந்திர் அயோத்தி பிரசாத்’ என்கிற பெயரில் இனிப்புகளை விற்பனை செய்ததாக அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது.

அப்புகாரில், ‘ஸ்ரீராம் மந்திர் அயோத்தி பிரசாத்’ என்ற போர்வையில் அமேசான் நிறுவனம் இனிப்புகளை விற்பனை செய்வதில் ஏமாற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி இருந்தது. இதனடிப்படையில், அமேசான் நிறுவனத்துக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

அந்த நோட்டீஸில், “நோட்டீஸ் அனுப்பிய 7 நாட்களுக்குள் அமேசான் நிறுவனம் பதிலளிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் விதிகளின் கீழ் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, உணவுப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வதால், தவறான தகவல்களைப் பரப்புவது, பொருட்களின் உண்மையான பண்புகள் குறித்து நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாக நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

மேலும், தயாரிப்புகளின் துல்லியமான பண்புக்கூறுகள் குறிப்பிடப்பட்டிருந்தால், அத்தகைய நடைமுறைகள் நுகர்வோர் வாங்கும் முடிவுகளை எடுக்கத் தவறாகப் பாதிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: amazonAyodhya PrasadShri Ram MandirCentral Consumer Protection Authorityissues notice
ShareTweetSendShare
Previous Post

ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி : உற்சாக வரவேற்பு!

Next Post

அறிவுரை கூறும் தகுதி உங்களுக்கு இல்லை! – கனிமொழியை சாடிய அண்ணாமலை!

Related News

இந்தியா-ரஷ்யா-சீனா புது வியூகம் : சரியும் டாலரின் செல்வாக்கு – ட்ரம்பின் தப்புக் கணக்கு!

அது வேற வாய்…இது வேற வாய்..! : இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!

இரட்டை வேடம் போடும் அமெரிக்கா : உண்மையை அம்பலப்படுத்திய புள்ளிவிவரம்!

உத்தரகாசியை புரட்டி போட்ட நிலச்சரிவு – காரணம் – தீர்வு என்ன?

புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞர்!

ட்ரம்ப் மிரட்டல் – பணியாத இந்தியா : ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் ரகசியம்!

Load More

அண்மைச் செய்திகள்

சந்திரயான்-2 அனுப்பிய புதிய புகைப்படம்!

அமெரிக்கா செல்ல புதிய கட்டுப்பாடு : ரூ.13 லட்சம் டெபாசிட் செய்தால் மட்டுமே விசா!

சீனாவில் அசுர வேகத்தில் பரவும் சிக்குன்குனியா : இதுவரை 10,000 பேர் பாதிப்பு – பிற நாடுகளுக்கு ஆபத்தா?

11 ஆண்டுக்கு முன்பு மாயமான மலேசிய விமானம் : கருந்துளையில் சிக்கியதா? – ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

தீவிரமடையும் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் : தேக்கமடையும் குப்பைகளால் நிலவும் சுகாதார சீர்கேடு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 7 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

திமுக நிர்வாகியின் அட்டூழியம் : உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு சித்ரவதை!

நனவான மருத்துவக்கனவு : ஏழை மாணவிக்கு கரம் கொடுத்த நீட் தேர்வு!

திமுகவை தமிழகத்திலிருந்து வேறுடன் அகற்ற பணியாற்ற வேண்டும் : கேசவ விநாயகம்

அஜித் குமார் லாக்கப் டெத் : FIR-ல் அதிர்ச்சி தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies