அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை PVR அதன் பெரிய திரையில் திரையிட முடிவு செய்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராம் ஜென்ம பூமி அறக்கட்டளை செய்து வருகிறது.
அன்றைய தினம் நண்பகல்12.45 மணியளவில் கர்ப்ப கிரகத்தில் மூலவரான குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கும் வகையில் நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது.
இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை, நாடு முழுவதும் உள்ள இரயில் நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 9 ஆயிரம் திரைகளில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா திரையரங்கில் ஒளிபரப்படவுள்ளது. மல்டிபிளக்ஸ் PVR INOX Ltd, ராம் மந்திரில் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க பிரான் பிரதிஷ்டா விழாவை அதன் பெரிய திரையில் ஒளிபரப்பவுள்ளது.
PVR INOX ஆனது AajTak உடன் இணைந்து 160க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 70க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு செய்துள்ளது.
ஜனவரி 22ஆம் தேதி அன்று காலை 11 மணி முதல் 1 மணிவரை இந்த நேரடி ஒளிபரப்பு திரையிடப்படும். இதற்க்கு ரூ.100 மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அந்த டிக்கெட் உடன் சேர்ந்து பாப்கார்ன் மற்றும் குளிர் பானமும் வழங்கப்படும். திரையிடலுக்கான டிக்கெட்டுகளை PVR INOX ஆப், இணையதளம் மற்றும் பிற டிக்கெட் தளங்கள் மூலம் முன்பதிவு செய்யலாம்.