தமிழகம் டூ அயோத்தி – சிறப்பு இரயில்கள் இயக்க திட்டம்!
Sep 13, 2026, 03:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகம் டூ அயோத்தி – சிறப்பு இரயில்கள் இயக்க திட்டம்!

Murugesan M by Murugesan M
Jan 20, 2024, 05:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்திலிருந்து அயோத்திக்கு சிறப்பு இரயில்கள் இயக்க இரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி இராமஜென்ம பூமியில், மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இராமர் கோவிலில், வருகிற 22-ஆம் தேதி பிராண பிரதிஷ்டை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை செய்து வருகிறது. இந்த விழாவில், நாடு முழுவதிலுமிருந்து 7 ஆயிரம் பேர் கலந்துகொள்ள உள்ளனர்.

அயோத்தி இராமர் கோவில் திறக்கப்பட்ட பிறகு, நாடு முழுவதிலும் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக, அயோத்தியில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதி அயோத்தியில் அதிநவீன வசதிகளுடன் சர்வதேச தரத்திலான விமான நிலையம் அமைக்கப்பட்டு, விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், பல கோடி ரூபாய் செலவில் இரயில்வே நிலையம் மேம்படுத்தப்பட்டுள்ளன. அயோத்திக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து விமான சேவையும், இரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இதுபோல தமிழகத்திலிருந்து அயோத்திக்கு சிறப்பு இரயில்கள் இயக்க தெற்கு இரயில்வே முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தெற்கு இரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தற்போதுள்ள நிலவரப்படி, அயோத்தி தாம் இரயில் நிலையத்தில் ஒரு நாளைக்கு, 100 இரயில் சேவைகளை இயக்க முடியும்.

அதற்கேற்ற வகையில், திருநெல்வேலி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் இருந்து அயோத்திக்கு, 34 சிறப்பு இரயில்களை இயக்க, ஐ.ஆர்.சி.டி.சி. திட்டமிட்டுள்ளது. இந்த இரயில்களில் குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு இரயில்கள், வரும் 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 29-ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளன. இதுகுறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

Tags: Indian Railwayayodhya ramar temple
Share
Tweet
SendShare
Previous Post

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா திரையரங்கில் ஒளிபரப்பு!

Next Post

பெண்களை மையமாக வைத்து குடியரசு தின அணிவகுப்பு: பாதுகாப்புச் செயலாளர் தகவல்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies