NCC இன் பல்வேறு முயற்சிகள் மூலம், தேசத்தின் இளைஞர்கள் சமூகத் திறன்களை வளர்க்கிறார்கள் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தேசிய கேடட் கார்ப்ஸின் (என்.சி.சி) பல்வேறு முயற்சிகள் மூலம், தேசத்தின் இளைஞர்கள் சமூக திறன்களை வளர்த்து, தேசிய பெருமை உணர்வைக் கொண்டு வருகிறார்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
டெல்லியில் குடியரசு தின முகாமில் NCC கேடட்களுக்கு மத்தியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.
அப்போது பேசிய ராஜ்நாத் சிங் ,
தேசிய பெருமை என்பது மனித இதயத்தின் வலிமையான உணர்வு என்று கூறினார். இந்த தேசியப் பெருமித உணர்வினால்தான் இந்தியா சுதந்திரமடைந்தது என்றார்.
அவர் என்சிசி கேடட்டாகவும் இருந்ததாக கூறினார். இப்போதைய காலகட்டம் போட்டி நிறைந்த காலகட்டம் என்றும், இந்த காலகட்டத்தில் இளைஞர்கள் தொடர்ந்து படிப்பது மட்டும் இன்றி, படிப்போடு உடல், மன, சமூகத் திறன் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்றுக் கூறினார்.
கேடட்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் என்சிசி பெரும் பங்கு வகிக்கும் என்றும் அவர்களின் ஆளுமையை மேம்படுத்த உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அவர்கள் எந்தத் துறைக்குச் சென்றாலும், என்.சி.சி.யில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், மேலும் நாட்டின் வளர்ச்சியில் சிறந்ததை வழங்க முடியும் எனத் தெரிவித்தார்.