ஜல் சக்திக்கான மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திரிபுரா மாநிலம் அகர்தலாவில் ஜல் ஜீவன் இயக்கம் குறித்து ஆய்வு செய்தார்.
திரிபுரா மாநிலத்தில் கடந்த 4 ஆண்டுகளாக ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், அகர்தலாவில் ஜல் ஜீவன் இயக்கத்தை மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆய்வு செய்தார். அப்போது, கடந்த 4 ஆண்டுகளாக இப்பணியின் மூலம் மக்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காண்பது ஊக்கமளிப்பதாக இருக்கிறது..
திரிபுராவில் ஜல் ஜீவன் மிஷன் 100 சதவீத நீர் வழங்கல் திட்டத்தை வேகமாக நெருங்கி வருகிறது. தற்போது, மாநிலம் கிராமப்புற வீடுகளுக்கு 75.96 சதவீத குழாய் நீர் விநியோக இணைப்புகளை எட்டி இருக்கிறது. இது 2019-ம் ஆண்டு வெறும் 3.29 சதவீதத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது” என்றார்.
மேலும், “ஹர் கர் ஜல்” முயற்சியில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட்டர்கள் மற்றும் மாநில அரசு அதிகாரிகளுடனான உரையாடலின்போது, ”மாவட்டங்களில் உள்ள சவால்களை கண்டறிந்து, ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர் இணைப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான செயல்முறையை விரைவுபடுத்துங்கள்” என்று அமைச்சர் ஊக்குவித்தார்.
திரிபுரா மாநிலத்தின் 8 மாவட்டங்களில், மேற்கு திரிபுரா, உனகோட்டி, வடக்கு திரிபுரா மற்றும் கோமதி ஆகியவை 75% இலக்குகளை தாண்டி, 75 சதவீதத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு நீர் வழங்குவதை உறுதி செய்திருக்கின்றன. மீதமுள்ள மாவட்டங்கள் தெற்கு திரிபுரா, கோவாய், தலாய் மற்றும் செபாஹிஜாலா 69 சதவீதத்திற்கும் மேல் 73 சதவீதத்திற்கும் மேல் உள்ளன.