இமாச்சல பிரதேசத்தில் இன்று 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இமாச்சல பிரதேசம் கின்னவுர் பகுதியில் இன்று மதியம் 2.35 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக பதிவானது
இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், கின்னவுர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டன. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் வெளியாகவில்லை.