19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா 251 ரன்களை எடுத்துள்ளது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் பிப்ரவரி 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இன்றைய நாள் மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. அதில் இந்தியா – வங்கதேசம் அணிகள் விளையாடும் போட்டி தென் ஆப்ரிக்காவின் ப்ளூம்ஃபோன்டைனில் உள்ள மங்காங் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஆதர்ஷ் சிங் மற்றும் அர்ஷின் குல்கர்னி களமிறங்கினர். இதில் அர்ஷின் குல்கர்னி 7 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய முஷீர் கான் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் உதய் சஹாரன், ஆதர்ஷ் சிங் கூட்டணி சிறப்பாக செயல்பட்டது. இதில் ஆதர்ஷ் சிங் 6 பௌண்டரீஸ் உட்பட 76 ரன்களும், உதய் சஹாரன் 4 பௌண்டரீஸ் உட்பட 64 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இவர்களையடுத்து களமிறங்கிய பிரியான்சு மோலியா மற்றும் ஆரவெல்லி அவனிஷ் ராவ் தலா 23 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சச்சின் தாஸ் 26 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 251 ரன்களை எடுத்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக மருப் மிருதா 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
சவுத்ரி முகமது ரிஸ்வான் மற்றும் மஹ்புஸூர் ரஹ்மான் ஆகியோர் தலா 1 விக்கெட்களை எடுத்தனர். இதனால் வங்கதேச அணிக்கு 252 ரன்கள் வெற்றி இலக்காக உள்ளது.