ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதல் பெண் தலைவராக, மிட்சுகோ டோட்டோரி (Mitsuko Tottori) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐப்பான் ஏர்லைன்ஸ் என்ற சர்வதேச விமான சேவை நிறுவனத்திற்கு முதல் பெண் தலைவராக மிட்சுகோ டோட்டோரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், 1985-ஆம் ஆண்டு ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில், விமானப் பணிப்பெண்ணாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
இவரின் கடினமான உழைப்பினாலும், திறமையின் காரணமாகவும் விமான நிறுவனத்தில் பல்வேறு உயரிய பொறுப்புகளை வகித்தார்.
நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய இவருக்கு தற்போது தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதல் பெண் தலைவராக பதவி ஏற்க உள்ளார்.
தற்போதைய தலைவர் யுஜி அகாசாகா (Yuji Akasaka) முக்கிய பொறுப்பில் தொடர்வார் என்று ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய மிட்சுகோ டோட்டோரி (Mitsuko Tottori), தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பானது சக பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.