கடந்த 2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, அமெரிக்காவில் சுமார் 40 மில்லியன் ஏக்கர் நிலங்கள் அமெரிக்கர்கள் அல்லாதவர்களுக்கு சொந்தமானதாக உள்ளது. குறிப்பாக, சீனா, ரஷ்யா, ஈரான் நாடுகளை சேர்ந்தவர்கள் நிலங்களை வாங்கியுள்ளதால், அமெரிக்கா கவலை அடைந்துள்ளது.
வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் மில்லியன் கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கி வருகிறார்கள். இதில், குறிப்பாக, சீனாவுடன் தொடர்புடைய நிறுவனங்கள் அடங்கும்.
அமெரிக்கா வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ௨௦௨௧-ஆம் ஆண்டு வரை, அமெரிக்கர்கள் அல்லாதவர்கள் சுமார் 40 மில்லியன் ஏக்கர் விவசாய நிலங்களை அமெரிக்காவில் வாங்கி உள்ளனர். இது கடந்த 2016-ஆம் ஆண்டிலிருந்து 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது அமெரிக்காவுக்கு பல்வேறு வகையில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். விவசாய நிலங்களை சீனாவுக்கு விற்க தடை விதிக்க வேண்டும் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த வார தொடக்கத்தில், மொன்டானாவின் செனட்டர் ஜான் டெஸ்டர், சீனாவுடன் தொடர்புடைய நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் அமெரிக்காவில் விவசாய நிலங்களை வாங்குவதை தடை செய்ய வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.
முன்னதாக, சீனா, ரஷ்யா, வட கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் விவசாய நிலம் வாங்குவதைத் தடைசெய்யும் மசோதாவுக்கு டெஸ்டர் ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.