22 தீர்த்தங்களில் நீராடிய பிரதமர் : ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்தார் மோடி!
Sep 14, 2026, 12:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

22 தீர்த்தங்களில் நீராடிய பிரதமர் : ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்தார் மோடி!

Murugesan M by Murugesan M
Jan 20, 2024, 09:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஸ்ரீரங்கத்தில் இருந்து ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடி, அக்னி தீர்த்தம் மற்றும் 22 தீர்த்தங்களில் நீராடிய பின் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

வட இந்தியாவில் அமைந்துள்ள காசியில் கங்கையில் குளித்து, காசி விஸ்வநாதரை வணங்கினால் முக்தி கிடைக்கும் என்பார்கள். அந்த வகையில் தெற்கில் அமைந்துள்ள  ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தமும், கோயிலில் அமைந்துள்ள 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமியை வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆலயத்தில் 22 தீர்த்தங்களும், வெளியே 22 தீர்த்தங்களும் உள்ளன. ஆலயத்தில் இருக்கக் கூடிய 22 தீர்த்தங்கள் கிணறுகளாக அமைந்துள்ளன. வெளியே இருக்கக் கூடிய 22 தீர்த்தங்கள், கோவிலுக்கு எதிரே அமைந்துள்ள அக்னி தீர்த்தம் எனும் கடலில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ராமேஸ்வரம் கோவிலில் வழிபாடு செய்ய விரும்புபவர்கள் முதலில் அக்னி தீர்த்தம் என அழைக்கப்படும் சமுத்திரத்தில் நீராடி பின்னர் 22 தீர்த்தங்களை குளித்துவிட்டு, உடையை மாற்றிக் கொண்டு, சுவாமியை தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

இந்நிலையில், ஸ்ரீரங்கம் பயணத்தை முடித்துக்கொண்டு ராமேஸ்வரம் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாலையில் இருபுறமும் திரண்டிருந்த ஏராளமான பாஜக தொண்டர்கள் மலர்களை தூவி அவரை வரவேற்றனர். அப்போது காரில் நின்றவாறு கையசைத்தபடி வரவேற்பை பிரதமர் ஏற்றுக்கொண்டார்.

ராமநாதசுவாமி திருக்கோயில் எதிரே உள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடிய பின்னர்  22 புண்ணிய தீர்த்த கிணறுகளில் பிரதமர் புனித நீராடினார். பின்னர் ராமநாத சுவாமி கோவிலுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மேளதாளங்கள் முழங்க சிறப்பான  வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி, திருக்கோயில் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற ராமாயண கதாவில் அவர் கலந்து கொண்டார்.

இன்று இரவு ராமேஸ்வரத்தில் தங்கும் பிரதமர் மோடி, நாளை ஞாயிற்றுக்கிழமை காலை தனுஷ்கோடி அரிச்சல் முனை செல்கிறார். கோதண்டராமன் கோயிலிலும் அவர் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் ஹெலிகாப்டரில்  மதுரை சென்று அங்கிருந்து விமான மூலம் டெல்லி செல்கிறார். பிரதமர் செல்லும் வழித்தடம், தங்கும் இடமான ராமகிருஷ்ண மடம், திருக்கோயில் வளாகம் உள்ளிட்டவற்றில் பிரதமரின் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: ModibjpsrirangamrameswaramtrichyRameswaram Ramanathaswamy TemplePM ModiTamil Nadu
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்காவில் விவசாய நிலங்களை வாங்கும் சீனா: அமெரிக்கா கவலை

Next Post

தமிழகத்தில் 1 கோடியை நெருங்கும் இராமர் கோவில் அழைப்பிதழ்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies