தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் நம்பியுள்ள, 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.72 அடியாக உள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 150 கன அடியிலிருந்து 556 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 70.74 அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 70.72 அடியாக குறைந்துள்ளது.
அணையில் தற்போது 33.32 டி.எம்.சி தண்ணீர் இருப்பு உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து 600 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீர் தேவைக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.