நியூசிலாந்தின் ஒழுங்குமுறை அமைச்சர் டேவிட் சீமோர், “ஜெய் ஸ்ரீ ராம்” என்று தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
அயோத்தி இராமர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கும் நிலையில் வண்ண மலர்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.
அயோத்தி இராமர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் குறித்து நியூசிலாந்தின் ஒழுங்குமுறை அமைச்சர் டேவிட் சீமோர் செய்தியாளரிடம் பேசியவர்,
500 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராமர் கோயில் கட்டுமானத்தை சாத்தியமாக்கிய பிரதமர் மோடி உட்பட இந்தியாவில் உள்ள அனைவரையும் வாழ்த்தினார். இது இன்னும் 1000 ஆண்டுகள் கடந்தும் பேசும்.
தற்போது சாவால் நிறைந்த சூழலில், ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களை வழிநடத்தும் தைரியமும் விவேகமும் பிரதமர் மோடிக்கு இருப்பதாக வாழ்த்தினார். பிரதமர் மோடிக்கு வலிமையும் நம்பிக்கையும் இருக்குகிறது என்று நம்பிக்கை தெரிவித்த அவர், ராமர் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.