ஸ்ரீ ராமரின் பிராண பிரதிஷ்டை விழாவில் பிரதமர் மோடி!
Mar 15, 2026, 08:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீ ராமரின் பிராண பிரதிஷ்டை விழாவில் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Jan 22, 2024, 07:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் இன்று நடைபெறும் ஸ்ரீ ராமரின் பிராண பிரதிஷ்டை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயத்தில் ஸ்ரீ ராம் லல்லாவின் (குழந்தை ராமர்) பிராண பிரதிஷ்டை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நண்பகல் 12 மணியளவில் பங்கேற்கிறார். முன்னதாக, 2023 அக்டோபரில், பிராண பிரதிஷ்டை விழாவிற்கு ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளையிடமிருந்து பிரதமர் அழைப்பைப் பெற்றார்.

வரலாற்று சிறப்புமிக்க பிராண பிரதிஷ்டை விழாவில் நாட்டின் அனைத்து முக்கிய ஆன்மீக மற்றும் மத பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். பல்வேறு பழங்குடியின சமூகங்களின் பிரதிநிதிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் விழாவில் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றவுள்ளார்.

ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலய கட்டுமானத்தில் தொடர்புடைய தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவார். பகவான் சிவனின் பழமையான ஆலயம் புதுப்பிக்கப்பட்டுள்ள குபேர திலாவையும் பிரதமர் பார்வையிடுவார். புதுப்பிக்கப்பட்ட இந்த கோவிலில் அவர் பூஜை மற்றும் தரிசனம் செய்யவுள்ளார்.

பிரமாண்டமான ஸ்ரீ ராம் ஜென்மபூமி ஆலயம், பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் (கிழக்கு-மேற்கு) 380 அடி; அகலம் 250 அடி; உயரம் 161 அடி; மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 கதவுகளால் இது கட்டப்பட்டுள்ளது.

கோயிலின் தூண்கள் மற்றும் சுவர்கள் இந்து தெய்வங்கள், கடவுள்கள் மற்றும் தேவியர்களின் நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்களைக் கொண்டுள்ளன. தரை தளத்தில் உள்ள பிரதான கருவறையில், பகவான் ஸ்ரீ ராமரின் குழந்தை பருவ வடிவம் (ஸ்ரீ ராம் லல்லாவின் சிலை) வைக்கப்படுகிறது.

இந்த கோவிலில் நிருத்ய மண்டபம், ரங் மண்டபம், சபா மண்டபம், பிரதானா மண்டபம், கீர்த்தனை மண்டபம் என மொத்தம் ஐந்து மண்டபங்கள் உள்ளன. ஆலயத்துக்கு அருகில் ஒரு வரலாற்று கிணறு (சீதா கூப்) உள்ளது. இது பழங்கால கிணறு ஆகும்.

ஆலய வளாகத்தின் தென்மேற்கு பகுதியில், குபேர திலாவில், பகவான் சிவனின் பண்டைய ஆலயம் மீட்டெடுக்கப்பட்டு, ஜடாயுவின் சிலை நிறுவப்பட்டுள்ளது.

கோயிலின் அடித்தளம் 14 மீட்டர் தடிமன் கொண்ட ரோலர்-காம்பாக்ட் கான்கிரீட் (ஆர்.சி.சி) அடுக்குடன் கட்டப்பட்டுள்ளது, இது செயற்கை பாறையின் தோற்றத்தை அளிக்கிறது.

கோவிலில் எங்கும் இரும்பு பயன்படுத்தப்படவில்லை. நிலத்தின் ஈரப்பதத்தில் இருந்து பாதுகாக்க, கிரானைட் கற்களால் 21 அடி உயர பீடம் கட்டப்பட்டுள்ளது.

ஆலய வளாகத்தில் ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், நீர் சுத்திகரிப்பு ஆலை, தீ பாதுகாப்புக்கான அமைப்பு மற்றும் ஒரு மின் நிலையம் உள்ளது. நாட்டின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

 

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

இன்று பிரான் பிரதிஷ்டை: வண்ணப் பூக்கள், மின்னொளியில் ஜொலிக்கும் அயோத்தி!

Next Post

அயோத்தியில் நடமாடும் மருத்துவமனைகள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies