மிக நீளமான பாலமான அடல் சேது பாலத்தில் தலைகீழாக கார் கவிழ்ந்து, முதல் விபத்து நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், மும்பை – நவி மும்பை இடையே கட்டப்பட்டுள்ள அடல் சேது என்ற கடந்த 12-ம் தேதி பிரதமர் நரந்திர மோடி திறந்து வைத்தார். 17,840 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. மொத்தம் 21.8 கிலோ மீட்டர் நீளத்தில் சுமார் 16.5 கிலோ மீட்டர் தூரம் கடலில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் மிக நீண்ட பாலம் மற்றும் மிக நீண்ட கடல் பாலம் என்ற பெருமைகளை இது பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த புதிய பாலத்தில் முதல் கார் விபத்து நடந்துள்ளது. இந்த பாலத்தின் மீது அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாடுகளை இழந்து விபத்தில் சிக்கி கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
கார்கள் வேகமாக சென்று கொண்டிருக்க, அப்போது அதிவேகமாக கார்களுக்கு இடையே வரும் சிவப்பு நிற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவற்றின் மீது மோதி, உருண்டு புரண்டு விபத்தில் சிக்கியது. மேலும், பல அடி நீளத்திற்கு சென்ற கார் ஒருகட்டத்தில் சுவற்றின் மீது மோதி நிற்பதை காண முடிகிறது.
அந்த பாலத்தில் சென்ற மற்றொரு காரில் பயணித்த நபர் இந்த காட்சிகளை படமாக்கி உள்ளார். 2 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் அந்த காரில் பயணித்த நிலையில், அதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் லேசான காயங்களுக்கு உயிர் தப்பினர்.
First Accident on MTHL!
In Ravi Shashtri's words: Thodi der ke liye….(those who know, know)
Literally pic.twitter.com/UK0TJfL7Kb
— Roads of Mumbai (@RoadsOfMumbai) January 21, 2024