ஐதராபாத்தில் உள்ள சாலார் ஜங் அருங்காட்சியகத்தில் 5 புதிய கேலரிகளை மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி திறந்து வைத்தார்.
ஐதராபாத்தில் உள்ள சாலார் ஜங் அருங்காட்சியகத்தில் 5 புதிய கேலரிகள் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், புகழ்பெற்ற சிற்பி டாக்டர் ஏ.யாதகிரி ராவ், இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் முன்னாள் தலைவர் பேராசிரியர் ஒய்.சுதர்சன் ராவ், மூத்த ஐ.ஐ.எஸ். அதிகாரியும், தேசிய அருங்காட்சியகங்கள் கூடுதல் டி.ஜி.யுமான ஆஷிஷ் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் புதிய கேலரிகளை திறந்து வைத்து மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி பேசுகையில், “இந்தியாவின் புகழ்பெற்ற அருங்காட்சியகங்களில் ஒன்றான சாலார் ஜங் அருங்காட்சியகம், பழைய காட்சியகங்களை மறுசீரமைப்பதன் மூலமும், பொதுமக்களை ஈர்க்கும் ஆர்வமுள்ள சேகரிப்புகளில் இருந்து புதியவற்றைச் சேர்ப்பதன் மூலமும் புதுமை மற்றும் மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது” என்றார்.
இந்திய சிற்பக் கலைக்கூடத்தில் 40 சிற்பங்களில் சில காகத்திய காலத்து ஒரு ‘அனந்த்சயன விஷ்ணு’ போல கி.மு. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. Bidriware Gallery 300 தனித்துவமான பொருட்களை வழங்குகிறது. இதில், நேர்த்தியான ‘Huqqa’ தளங்கள் மற்றும் தனித்துவமான குடங்கள் உள்ளன.
அதே நேரத்தில், The Lamp and Chandelier Gallery உலகம் முழுவதும் இருந்து 180 பழங்கால பொருட்களை காட்சிப்படுத்துகிறது. ஐரோப்பிய வெண்கலக் காட்சியகத்தில் 100-க்கும் மேற்பட்ட வெண்கலச் சிலைகள் உள்ளன. மேலும், ஐரோப்பிய மார்பிள் கேலரியில் 50 பளிங்கு சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.