பாலாசாகேப் தாக்கரே பிறந்த நாளை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். பாலாசாகேப் தாக்கரே ஓர் உயர்ந்த மனிதர் என்றும், மகாராஷ்டிராவின் அரசியல் மற்றும் கலாச்சாரப் பரப்பில் அவரது தாக்கம் இணையற்றது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
“பாலாசாகேப் தாக்கரே அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவுகூர்கிறேன். அவர் ஓர் உயர்ந்த தலைவராக இருந்தார். மகாராஷ்டிராவின் அரசியல் மற்றும் கலாச்சாரப் பரப்பில் அவரது தாக்கம் இணையற்றது.
Remembering Balasaheb Thackeray Ji on his birth anniversary. He was a towering figure whose impact on Maharashtra's political and cultural landscape remains unparalleled. In the hearts of countless people, he lives on due to his leadership, unyielding dedication to his ideals and…
— Narendra Modi (@narendramodi) January 23, 2024
அவரது தலைமைத்துவம், கொள்கைகளுக்கான அவரது தளராத அர்ப்பணிப்பு, ஏழைகள் அடித்தட்டு மக்களுக்காகக் குரலெழுப்பும் உறுதிப்பாடு ஆகியவற்றின் காரணமாக எண்ணற்ற மக்களின் இதயங்களில் அவர் வாழ்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.