அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இந்திய மக்களுக்கு இஸ்ரேல் தூதர் வாழ்த்து தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, உலகெங்கிலும் உள்ள பக்தர்களுக்கு இது ஒரு வரலாற்று தருணம் என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நோர் கிலோன் தெரிவித்துள்ளார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘பிரான் பிரதிஷ்டா’ ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் அயோத்தியில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. கோயிலின் கருவறையில் வைக்கப்பட்டிருந்த குழந்தை ராமர் சிலைக்கு, பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உ.பி ஆளுநர் ஆனந்திபென் பட்டியல், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் முன்னிலையில் சிலை பிரதிஷ்டை பூஜைகள் செய்யப்பட்டது.
இது குறித்து இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நோர் கிலோன் இந்தியில் எழுதினார்: “ராம் மந்திர் பிரான் பிரதிஷ்தாவின் இந்த புனிதமான சந்தர்ப்பத்தில் இந்திய மக்களுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். உலகெங்கிலும் உள்ள பக்தர்களுக்கு இது ஒரு வரலாற்று தருணம்.
#राममंदिरप्राणप्रतिष्ठा के इस शुभ अवसर पर भारत के लोगों को हार्दिक शुभकामनाएं। यह दुनिया भर के भक्तों के लिए एक ऐतिहासिक क्षण है।
मैं #अयोध्या में #राममंदिर के जल्द दर्शन के लिए उत्सुक हूं; यकीनन वह मेरे पास मौजूद इस मॉडल से भी अधिक भव्य और सुंदर होगा।#RamMandir… pic.twitter.com/EXhgyftoxj
— Naor Gilon (@NaorGilon) January 22, 2024
“விரைவில் அயோத்தியில் ராமர் கோயிலைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்; நான் வைத்திருக்கும் இந்த மாதிரியை விட நிச்சயமாக இது மிகவும் பிரமாண்டமாகவும் அழகாகவும் இருக்கும், ”என்று தெரிவித்துள்ளார். ராமர் கோவிலின் சிறிய மாதிரியுடன் அவரது படத்தைப் பகிர்ந்து கொண்டார்.