ராவணனை பற்றி பேச வேண்டாம்: ராகுல் காந்தியை தாக்கிய அஸ்ஸாம் முதல்வர்!
Oct 26, 2026, 04:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராவணனை பற்றி பேச வேண்டாம்: ராகுல் காந்தியை தாக்கிய அஸ்ஸாம் முதல்வர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 23, 2024, 03:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

500 ஆண்டுகள் கழித்து ஸ்ரீராமரைப் பற்றி பேச இன்று (நேற்று) நல்ல நாள். ஆகவே, இராவணனைப் பற்றிப் பேச வேண்டாம் என்று ராகுல் காந்தியை அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா மறைமுகமாகத் தாக்கி இருக்கிறார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி, “இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை” என்கிற பயணத்தை வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கி இருக்கிறார். மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இந்த யாத்திரை, நாகலாந்து மாநிலம் வழியாக தற்போது அஸ்ஸாம் மாநிலத்தை நேற்று வந்தடைந்தது.

இதையடுத்து, ஸ்ரீமந்த சங்கரதேவா பிறந்த இடமான படத்ராவா சத்ராவில் சுவாமி தரிசனம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், அஸ்ஸாமில் ராகுலின் நியாய யாத்திரைக்கும் நேற்று தடை விதிக்கப்பட்டது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “உளவுத்துறை தகவலின்படி, ஒரே நாளில் இராமர் கோவில் கும்பாபிஷேகம், இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற இரு நிகழ்வுகள் நடைபெறுகிறது.

இந்த பரபரப்பான சூழலை சில சமூக விரோதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடலாம். இதனால், மாவட்ட அமைதிக்கும் குந்தகம் ஏற்படலாம். ஆகவே, இந்திய ஒற்றுமை நியாய யாத்திரைக்கு தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவித்திருந்தது. இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா ஷர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “ராவணனைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள்? இன்று (நேற்று) இராமரைப் பற்றி பேசலாமா? 500 ஆண்டுகள் கழித்து இராமரைப் பற்றி பேச இன்று (நேற்று) நல்ல நாள். ஆகவே, ராவணனைப் பற்றி பேச வேண்டாம்” என்று கூறியிருக்கிறார்.

Tags: Assam CmattackHimanta Biswa Sarmarahul gandhi
Share
Tweet
SendShare
Previous Post

சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி வசுந்தரா தேவி மறைவுக்கு அண்ணாமலை இரங்கல்!

Next Post

3 குட்டிகளை ஈன்றெடுத்த நமீபியா சிவிங்கி புலி

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies