ஒடிசாவில் ஸ்ரீ இராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் 1 லட்சம் விளங்குகளை ஏற்றி சாதனை படைத்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இராமர் கோவிலில், கடந்த 22-ஆம் தேதி குழந்தை இராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதில், பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு, கோவில்கள், இரயில் நிலையங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பல இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனைக் கோடிக்கணக்கான மக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.
அயோத்தியில் பால இராமர் பிரதிஷ்டை செய்யப்பட்டதைக் கொண்டாடும் விதமாக ஒடிசாவில் பள்ளி மாணவர்கள் 1 லட்சம் விளங்குகளை ஏற்றி சாதனை படைத்துள்ளனர்.
தேவ் தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக புவனேஸ்வரில் உள்ள விகாஷ் ரெசிடென்சியல் பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் 1,00,000 தீபங்களை ஏற்றினர்.
இதன் மூலம் இப்பள்ளி மாணவர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். மொத்தமாக 1000 பள்ளி மாணவர்கள் விளக்கு மூலமாகப் பகவான் ராமரின் உருவத்தை வரைந்தனர்.
பள்ளி நிர்வாகமும் மாணவர்களும் விளக்குகளை ஏற்றி, பிரார்த்தனை செய்து, சங்கு முழங்க, பக்திப் பாடல்கள் பாடி, பகவான் ஸ்ரீராமரை வணங்கினர்.