நமுத்துப்போன மிக்சர் திமுக இளைஞரணி மாநாடு! - அண்ணாமலை விமர்சனம்
Sep 9, 2025, 07:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நமுத்துப்போன மிக்சர் திமுக இளைஞரணி மாநாடு! – அண்ணாமலை விமர்சனம்

Web Desk by Web Desk
Jan 23, 2024, 06:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

என் மண் என் மக்கள் பாதயாத்திரை மிகப்பெரிய எழுச்சியுடன் நடந்து கொண்டிருக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளரிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,

என் மண் என் மக்கள் யாத்திரை, 150 தொகுதிகளை கடந்துள்ளோம். மிகப்பெரிய எழுச்சியுடன் இந்த யாத்திரை நடந்து கொண்டிருக்கிறது. புதியவர்கள், அரசியலில் நடுநிலையாளர்கள் என்று நினைப்பவர்கள், குறிப்பாக சகோதரிகள் அனைவரும் தங்கள் பாதயாத்திரையாக நினைத்து பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

யாத்திரை என்பது பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து யாத்திரைகளும் ஒரு படி மேலே உயர்த்தி விட்டு சென்றபோது, இந்த யாத்திரையின் வெளிப்பாடுதான் ராமர் கோவிலின்  பிரதிஷ்டை. அயோத்திக்காக பாரதிய ஜனதா கட்சி நம்முடைய துணை அமைப்புகள், அவர்களை ஒருங்கிணைத்ததாக இருக்கட்டும் இவை அனைத்தும் கட்சியை ஒரு படி மேலே கொண்டு போகிறது.

நமது யாத்திரை அரசியல் மாற்றம் வேண்டும் என்று யாத்திரை. தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை படம் பிடித்து காட்டுகிறோம். அனைத்து ஊருக்கும் சென்று அங்கே மக்களை சந்திக்கிறோம். யாத்திரை என்பது ஒரு நேர்கோட்டு பயணமாக இருக்கும். ஆனால் நமது யாத்திரை பட்டி தொட்டி சென்று விவசாய நிலம் வரைக்கும் சென்று சின்ன சின்ன ஊர்களுக்கும் சென்று மக்களை சந்திக்கிறோம். கட்சியின் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகப்பெரிய புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது.

இங்கு மிகப்பெரிய எழுச்சி தமிழகத்தில் உருவாகியுள்ளது.  இதனால் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் சொன்ன பிறகும் திண்டுக்கல் காவல்துறை கொடுத்துள்ள கடிதங்களை நீதிமன்றத்தில் வைத்துள்ளோம்.

இவை அனைத்தையும் மீண்டும் விசாரணைக்கு எடுப்போம் என நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த ஊரில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அதனால் பிரார்த்தனை செய்யக் கூடாது என்ற மிக மிக மோசமான முன்னிலைப்படுத்தக்கூடிய ஒரு நோக்கத்தை தமிழக அரசு எடுத்துள்ளது.

தங்கை கொடியேற்ற, அண்ணன் முழங்க திமுக இளைஞரணி மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இப்படி தான் சொல்ல வேண்டும். நமுத்துப்போன மிக்சர் திமுக இளைஞரணி மாநாடு எனத்தெரிவித்தார். திமுக ஒரு தீய சக்தி எனத் தெரிவித்தார்.  தமிழகத்தில், எதிர் கட்சியாக பாஜக செயல்படுகிறது எனத் தெரிவித்தார்.

திமுக எம்எல்ஏவின் மகன் வீட்டிற்கு எப்படி வந்தேன், என்ன கொடுமை நடந்தது, 16 ஆயிரம் பேசி ஐந்தாயிரம் கொடுத்தார்கள். மோசமான அரிசி கொடுத்தார்கள், என்னை அடித்தார்கள். என பார்ப்பவர்கள் கண்ணில் தண்ணீர் வரும் அளவிற்கு அந்த சிறுமி பேசினார் எனத் தெரிவித்தார்.

பல்லாவரம் பகுதியில் பிற்படுத்தப்பட்ட பட்டியல் இனத்தைச் சார்ந்த பெண்ணுக்கு ஆதரவாக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

நானும் காவல்துறையில் பணியாற்றி இருக்கிறேன். அடுத்து அவர்களின் செயல்பாடு என்ன இருக்கும் என்பது எனக்கு நன்றாக தெரியும். ஒரு நபர் கொலை செய்யப்பட்டார். ஒரு மாதம் கைது செய்யப்படவில்லை நீதிமன்றத்தில் சென்று முன்ஜாமின் வாங்கிய பிறகு அவரை கைது செய்து வெளியில் விட்டார்கள்.

இதுதான் திமுகவின் நாடகம். ஆனால் பாஜகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டால் உடனடியாக காவல்துறை வந்து கைது செய்து விடுவார்கள். இந்த குழந்தை பாஜகவின் கொடி எங்கள் வீட்டில் ஏற்றுகிறார்கள் எனக் கூறியிருந்தால், இந்நேரம் நேரம் காவல்துறை சென்றிருக்கும் என்றார்.

அண்ணாமலை பற்றி பேசினால் ஃபேமஸ் ஆகிவிடலாம். பாஜக பற்றி பேசினால் ஃபேமஸ் ஆகிவிடலாம் என்று சுற்றிக்கொண்டிருக்கிறார்கள. அவர்கள் குறித்து நான் பேச விரும்பவில்லை. மார்க்கெட் இல்லாத நடிகர்களையும் மார்க்கெட் இல்லாத இயக்குநர்களையும் பற்றி பேசி அவர்கள் மார்க்கெட்டை நாங்கள் ஏன் ஏற்றிவிட வேண்டும்?

1952ல் இருந்து எங்களின் கொள்கை தெளிவாக உள்ளது. அனைத்து மக்களையும் இணைத்து அறநெறியில், தர்ம வழியில் ராமர் கோவிலை எழுப்புவோம் என்பததான் எங்களின் வார்த்தை.
கிராண்ட் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை – ஜனவரி 26 வரை சிறந்த விற்பனையான உபயோக பொருட்கள் 55% வரை தள்ளுபடி

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தலைவணங்கி, எங்களிடம் ஆட்சி இருந்த போதும் கூட பாராளுமன்றத்தில் எந்த சட்டமும் இயற்றாமல், உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருந்து, தீர்ப்பு வந்த பிறகு ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவுக்கான முதல் பத்திரிக்கை அங்குள்ள இஸ்லாமிய சகோதரர்களுக்கு தான் கொடுக்கப்பட்டது. நாடு முழுவதும் மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டுதான் கோயில் கட்டப்பட்டுள்ளது. எந்த ஒரு தனிமனிதன் பணம் இல்லை.

இந்து என்பது மதம் இல்லை, இந்துத்துவா என்பது வாழ்வியல் முறை. எல்லோரையும் அரவணைத்து நேற்று ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கற்பூரம் ஏற்றாவிட்டால் தீவிரவாதிகள் என்றும் பாஜக சொன்னதா? அல்ல ஆர்எஸ்எஸ் சொன்னதா? இயக்குநர் ரஞ்சித் அப்படி சொல்வார்கள் என்றால் அது அவருடைய பிரச்சனை. அப்படி சொன்ன இயக்குநர் ரஞ்சித்தின் மூளையிடம் போய் கேளுங்கள்.

பா. ரஞ்சித் கனவு கண்டு பேசுவதற்கெல்லம் நான் பதில் சொல்ல முடியாது. மார்க்கெட் இல்லை என்றும் படம் இல்லை என்றும் பேசுபவர்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalaidmk fails
ShareTweetSendShare
Previous Post

2023 – ஐசிசி ஓடிஐ அணி அறிவிப்பு!

Next Post

இராமனுக்குத் தடை போட்டால் பக்தியாலும் சக்தியாலும் தகர்க்கப்படும்: தெலங்கானா ஆளுநர்!

Related News

பொருளாதார நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும் – பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் – பிரதமர் மோடி இன்று ஆய்வு!

ஜிஎஸ்டி வரி சீர் திருத்தம் – உணவு பொருட்களின் வரி விதிப்பு மாற்றங்கள் குறித்த பட்டியல்!

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து – நேபாள அரசு அறிவிப்பு!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறந்த குடியரசு துணைத் தலைவராக செயல்படுவார் – பிரதமர் மோடி

குடியரசு துணை தலைவர் தேர்தல் – இன்று வாக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies