மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிப்ரியா மல்லிக். கடந்த காலத்தில் உணவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். அப்போது ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்வதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஜோதிப்ரியா மல்லிக்கை கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக பாங்கானில் உள்ள முன்னாள் நகராட்சி தலைவர் சங்கர் ஆதியா, மற்றும் ஷாஜஹான் ஷேக் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜனவரி 5ஆம் தேதி சோதனை நடத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் தலைமறைவான ஷாஜஹான் ஷேக்கின் வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். 120-க்கும் மேற்பட்ட மத்திய ஆயுதப் போலீஸ் படையுடன் சென்ற அமலாக்க இயக்குநரக அதிகாரிகள், சந்தேஷ்காலி பகுதியில் உள்ள ஷேக்கின் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.