திமுக இளைஞரணி மாநாடு முழுவதுமே போலி பிம்பங்கள்! - அண்ணாமலை
Sep 13, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 திமுக இளைஞரணி மாநாடு முழுவதுமே போலி பிம்பங்கள்! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Jan 24, 2024, 10:17 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒவ்வொரு முறை திமுக ஆன்மீகத்திற்கு எதிராக செயல்படும் போதெல்லாம் தமிழகத்தில் ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்படுகிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, 

இங்குள்ள திருபுவனம் பட்டு, ஒரு வருடத்திற்கு 465 கோடி ரூபாய் வரை விற்பனையாகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு, திருபுவனம் பட்டுக்கு நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி புவிசார் குறியீடு வழங்கிப் பெருமைப்படுத்தினார்.

அயோத்தி ராமர் கோவிலில் நமது பாரதப்பிரதமர் நரேந்திர மோடியால் பாலராமர் பிராணப் பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு, தமிழகத்தில் இருந்து புண்ணிய தீர்த்தம் கொண்டு செல்லப்பட்டது.

சமீபத்தில் தமிழகம் வந்திருந்த நமது பிரதமர் மோடி அவர்கள், தமிழகத்தில் பகவான் ஸ்ரீ ராமருக்குத் தொடர்புள்ள மூன்று முக்கிய திருத்தலங்களான ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில் மற்றும் தனுஷ்கோடியில் உள்ள கோதண்டராம சுவாமி திருக்கோயில் ஆகிய வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோவில்களுக்குச் சென்று வழிபட்டார்.

வாக்கரசியலுக்காக, ஹிந்து மக்களையும், கடவுள்களையும் தவறாகப் பேசி, குளிர்காய்ந்து கொண்டிருந்த திமுகவுக்கு, நேற்றைய அயோத்தி ராமபெருமான் கோவில் விழா, தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது கலக்கத்தைக் கொடுத்திருக்கிறது.

ஆலயங்களில் நேற்று வழிபாடுகளைத் தடுக்க முயற்சித்த திமுகவை, நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. ஒவ்வொரு முறை திமுக ஆன்மீகத்திற்கு எதிராக செயல்படும் போதெல்லாம் தமிழகத்தில் ஆன்மீக மறுமலர்ச்சி ஏற்படுகிறது.

மக்களின் அடிப்படை வழிபாட்டு உரிமைகளை பறித்துவிட்டு, நாங்கள் பெருமாளையும் கும்பிடுவோம் பெரியாரையும் கும்பிடுவோம் என்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ஹிந்துக்கள் விழித்து கொண்டால் திமுகக்காரன் காவடி தூக்க கூட தயங்கமாட்டான் என்று அமரர் சோ ராமசாமி கூறியதில் பாதி உண்மையாகிவிட்டது.

தமிழகத்தில், ஊழலுக்கு எதிராக, குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் குரலெழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த ஒன்பதாண்டு கால ஊழலற்ற ஆட்சி, தமிழகத்திலும் வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஏழை எளிய மக்களின் நலனுக்கான பாஜக ஆட்சி தமிழகத்திலும் வரவேண்டும் என்ற விருப்பம் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில், தமிழகத்துக்கு 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு 3300 கோடி ரூபாய், 53,577 பேருக்கு பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மூலமாக வீடு, 3,81,295 வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர், 2,46,421 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 1,19,869 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 1,55,312 பேருக்கு, 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 1,19,233 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், 5,208 கோடி ரூபாய் முத்ரா கடனுதவி என லட்சக்கணக்கான மக்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் மத்திய அரசின் நலத்திட்டங்களால் பலனடைந்துள்ளனர்.

ஆனால், 99% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று கூறிய திமுக, ஆடுதுறையில் அரசு வேளாண்மைக் கல்லூரி, நாச்சியார் கோயில் குத்துவிளக்கு தயாரிப்பை ஊக்குவிக்க தஞ்சாவூர் அருகில் அதற்கென்று தனி கிராமம் என இந்த தொகுதிக்கு கொடுத்த இரண்டு வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றவில்லை.

ஆனால், திமுக இளைஞரணி மாநாட்டில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து 25 நகைச்சுவைத் தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள். மாநாடு முழுவதுமே போலி பிம்பங்களைக் கட்டமைத்திருக்கிறார்கள்.

வரும் பாராளுமன்றத் தேர்தல், தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல். ஒற்றுமைக்கும் பிரிவினைக்கும் இடையே நடக்கும் தேர்தல். பாரதப் பிரதமரின் நல்லாட்சிக்கும், திமுகவின் குடும்ப ஆட்சிக்கும் இடையே நடக்கும் தேர்தல். நேர்மையான ஆட்சிக்கும் ஊழல் கட்சிகளின் கூட்டணிக்கும் இடையே நடக்கும் தேர்தல்.

இந்தியாவின் நன்மைக்காக, குழந்தைகளின் எதிர்காலத்திற்காக, ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் மேலும் உயர, நேர்மையான நல்லாட்சி வழங்கி வரும் பாரதப் பிரதமர்  நரேந்திர மோடியின் மக்களாட்சியைத் தொடரச் செய்வோம். தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்போம் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalaien mann en makkal annamalai
Share
Tweet
SendShare
Previous Post

தொடர்ச்சியாக இந்து மத விரோதப் போக்கில் ஈடுபட்டு வரும் திமுக அரசு! – அண்ணாமலை கண்டனம்!

Next Post

மேற்கு வங்கம் : அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies