பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ் பேட்மிண்டன் போட்டிகளில் கலந்துகொண்டு அதில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
மதுரையில் பிறந்த நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடித்து வருகிறார். தற்போது இவர் திரைத்துறையைத் தாண்டி விளையாட்டு வீராங்கனையாக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
அந்த வகையில், டால்பின் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நடத்திய பேட்மிண்டன் போட்டியில் நடிகை நிவேதா பெத்துராஜ் பங்கேற்றார்.
இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் மதுரை அணிக்காகப் பங்கேற்ற நிவேதா பெத்துராஜ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
இதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோப்பை மற்றும் பதக்கத்துடன் நிவேதா பெத்துராஜ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை நிவேதா பெத்துராஜ் கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “ஒரு நாள் கூத்து” என்கின்ற திரைப்படத்தில் நடித்து தனது கலை உலக பயணத்தைத் தொடங்கினார்.
அதேபோல் மாடலிங் துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற “மிஸ் இந்தியா வேர்ல்ட் வைட்” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று டாப் 5 ஃபைனலிஸ்டாக வந்தது குறிப்பிடத்தக்கது.
அது மட்டும் இல்லாமல் அதே ஆண்டு நடந்த “மிஸ் இந்தியா யுஏஇ” போட்டிகளில் இவர் பட்டம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.