கர்தவ்யா பாதையில் குடியரசு தின அணிவகுப்பைக் காண 1500க்கும் மேற்பட்ட விவசாயிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.
கர்தவ்யா பாதையில் நடைபெறும் 75வது குடியரசு தின அணிவகுப்பைக் காண 1500க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த விவசாயிகள், பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா போன்ற பல்வேறு மத்திய அரசின் திட்டங்களின் பயனாளிகள்.
அங்கு அவர்களுக்கு, விவசாய உள்கட்டமைப்பு நிதி, தேசிய விதைகள் ஒத்துழைப்பு மற்றும் ஒரு துளி அதிகப் பயிர் போன்ற முக்கிய அரசாங்கத் திட்டங்கள் குறித்தும் விவசாயிகள் பயிற்சி பெறுவார்கள்.