சென்னை நீலாங்கரையில் இன்று காலை கடல் தூய்மை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்ற போது கடலில் டால்பின் மீன்கள் தென்பட்டன.
உலகில் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரையான சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் இன்று விழுப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
‘கடலுக்கு நீந்துவோம், பெருங்கடலைக் காப்போம்’ என்ற தலைப்பில் இந்த கடல் தூய்மை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மூன்று மாணவர்கள் நீலாங்கரை கடற்கரையில் இருந்து மெரினா கடற்கரை வரை நீந்தியே சென்றனர்.
இதில் 9 வயதேயான தாரகை, 7 வயதான நிஷ்விக், 14 வயதான கவி அஸ்வதன் ஆகியோர் நீலாங்கரை கடற்கரையில் இருந்து மெரினா கடற்கரை வரை நீந்தியே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இவர்கள் கடலில் நீந்தி சென்றபோது அங்கு டால்பின் மீன்களும் காணப்பட்டது.
இதற்கிடையில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம், கடலின் ஆரோகியத்தின் முக்கிய பங்கை அங்கீகரித்து, முதுகலை மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு, கடலில் உள்ள உயிரனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த பாடங்களை வழங்க உள்ளது.
கடலில் உள்ள உயிரனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த பாடங்களுக்கான ஐந்து நாள் பயிற்சி வகுப்பு பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில் பயிற்சி பெற ஆர்வமுள்ளவர்கள் ஜனவரி 29 அல்லது அதற்கு முன்பு CMFRI இணையதளத்தில் (www.cmfri.org.in) பதிவு செய்யலாம்.