அசாம் ரைபிள்ஸ் வீரர் ஒருவர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 வீரர்கள் காயம் அடைந்தனர்.
தெற்கு மணிப்பூரில் உள்ள பட்டாலியனில் அசாம் ரைபிள்ஸ் வீரர் ஒருவர் தன்னிடம் இருந்து துப்பாக்கியால் திடீரென தனது சகாக்களை நோக்கி சுடத்தொடங்கினார். பின்னர் அவர் தன்னைத்தானே அவர் சுட்டுக்கொண்டார்.
அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் காயம் அடைந்த 6 வீரர்கள் ராணுவ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து அசாம் ரைபிள்ஸ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.மணிப்பூரில் இனக்கலவரம் நடந்து வரும் நிலையில், சாத்தியமான வதந்திகளை அகற்றவும், ஊகங்களைத் தவிர்க்கவும் சம்பவத்தின் விவரங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வது அவசியம்.
காயமடைந்தவர்கள் எவரும் மணிப்பூரைச் சேர்ந்தவர்கள் இல்லை என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தை தற்போதைய மோதலுடன் தொடர்புப்படுத்தக்கூடாது. இந்த சம்பவம் குறித்து உண்மைகளை கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேண அனைத்து வீரர்களும் ஒன்றாக தங்கி செயல்பட்டு வருகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.