திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டிற்கு சீல் வைத்த அமலாக்கத்துறையினர்!
Sep 24, 2025, 02:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி வீட்டிற்கு சீல் வைத்த அமலாக்கத்துறையினர்!

ஜனவரி 29ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ்!

Web Desk by Web Desk
Jan 24, 2024, 03:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்குவங்க திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜஹான் ஷேக்கின் இல்லத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர், வீட்டை பூட்டி சீல் வைத்து சென்றனர்.

மேற்கு வங்க அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிப்ரியா மல்லிக். கடந்த காலத்தில் உணவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். அப்போது ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்வதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ஜோதிப்ரியா மல்லிக்கை கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக பாங்கானில் உள்ள முன்னாள் நகராட்சி தலைவர் சங்கர் ஆதியா, மற்றும் ஷாஜஹான் ஷேக் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜனவரி 5ஆம் தேதி  சோதனை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் காயம் அடைந்தனர்.

இதனிடையே அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மேற்கு வங்க உள்துறை செயலர் மற்றும் டிஜிபிக்கு அம்மாநில ஆளுநர் ஆனந்த போஸ் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் தலைமறைவான  ஷாஜஹான் ஷேக்கின் வீட்டில் அமலாக்க துறையினர் இன்று மீண்டும் சோதனை நடத்தினர். சுமார் 120-க்கும் மேற்பட்ட மத்திய ஆயுதப் போலீஸ் படையுடன் சென்ற அமலாக்க இயக்குநரக அதிகாரிகள், சந்தேஷ்காலி பகுதியில் உள்ள ஷேக்கின் வீட்டில் சோதனை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து அவரது வீட்டை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள், ஜனவரி 29ஆம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் ஒட்டி சென்றனர்.

Tags: notice to Sheikh ShahjahanEnforcement DirectorateED raidsSheikh ShahjahanPDS scamhouse sealed
ShareTweetSendShare
Previous Post

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்!

Next Post

சென்ட்ரல் இரயில் நிலையத்தில் ஓய்வு அறைகள் திறப்பு!

Related News

தற்சார்பு பாரதத்தை நோக்கி : GOOGLE MICROSOFT-க்கு மாற்றாக களமிறங்கும் ZOHO!

நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி 2.0 : 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கார்கள் விற்பனை!

“புவிசார் அரசியல் போர்” : H-1B விசா கட்டண உயர்வு ட்ரம்பிற்கு வலுக்கும் கண்டனம்!

லாலு குடும்பத்திற்குள் புதிய பூகம்பம் : லாலு, தேஜஸ்வியை UNFOLLOW செய்த மகள் ரோகிணி!

விண்வெளியில் தொடங்கும் போர் : ‘BODYGUARD SATELLITE-களை களமிறக்கும் இந்தியா!

பொக்கிஷமாக பார்க்கப்படும் மான் கொம்பு வண்டு : ஒரு வண்டு பல கோடி விலை போகுமாம்!

Load More

அண்மைச் செய்திகள்

சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு வீசிய பாகிஸ்தான் விமானப்படை : பெண்கள், குழந்தைகளின் உயிரை பறித்த சோக சம்பவம்!

சீனாவுடன் சமரசம் செய்துகொண்ட அதிபர் ட்ரம்ப் : டிக்டாக் செயலியை முன்னிறுத்தி வெற்றிகண்ட ஜி ஜின்பிங்!

களைகட்டும் நவராத்திரி : கொலு பொம்மைகள் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

தூய்மை பணியாளர்களுக்கு தேவையான கருவிகள் வாங்க நிதி இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சியில் சமூகநீதி எல்லாம் தேர்தல் நேர சாயம் தானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஜி.வி.பிரகாஷ், ஊர்வசி ஆகியோர் தேசிய விருது பெற்றனர்!

சிறந்த துணை நடிகர் விருது பெற்றார் எம்.எஸ்.பாஸ்கர்!

தாதாசாகேப் பால்கே விருது பெற்ற மோகன்லால்!

அமெரிக்கா ஐசிசி-ஐ பொருளாதார தடைகளால் தாக்கக்கூடும்!

தெலங்கானா : அடுத்தடுத்து வீடுகளில் புகுந்து மர்மநபர்கள் துணிகர கொள்ளை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies