தனது தாத்தாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கியதற்கு பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு கர்பூரி தாக்கூரின் பேத்தி நன்றி தெரிவித்துள்ளார்.
மறைந்த, முன்னாள் பிகார் முதலமைச்சர் கர்பூரி தாக்கூருக்கு இந்தாண்டுக்கான பாரத ரத்னா விருதை மத்திய அரசு நேற்று அறிவித்தது.
இது குறித்து செய்தியாளரிடம் பேசிய கர்பூரி தாக்கூரின் பேத்தி டாக்டர் ஜாக்ரிதி,
“இது வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத பெருமையான தருணம். மறைந்த எனது தாத்தாவுக்கு பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா வழங்கிய மரியாதை, இதற்கு முன்பு கொடுக்கப்படவில்லை; இது பெருமைக்குரிய விஷயம்” என்று தெரிவித்துள்ளார்.