போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய விமானம் விபத்து: 74 பேர் உயிரிழப்பு!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய விமானம் விபத்து: 74 பேர் உயிரிழப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 24, 2024, 05:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய இராணுவ போக்குவரத்து விமானம், உக்ரைன் தெற்கு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த 74 பேரும் உயிரிழந்து விட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்திருக்கிறது. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இரு நாடுகளுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இந்தப் போரை நிறுத்தும்படி பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்தும் ரஷ்யா போரை நிறுத்தவில்லை.

இந்த சூழலில், இப்போரினால் ரஷ்யா படைகளின் வீரர்களில் பெரும்பகுதியினர் உயிரிழந்தும் மற்றும் காயமடைந்தும் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆகவே, தற்போது போர் நிறுத்தம் செய்ய ரஷ்யா ஒப்புக்கொண்டாலும், உக்ரைன் விடாப் பிடியாக இருக்கிறது.

இந்த நிலையில், இரு நாடுகள் இடையேயான பரஸ்பர ஒப்பந்தத்தின்படி கைதிகள் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், உக்ரைன் போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

அதாவது, ரஷ்யாவின் ஐ.எல்.76 விமானம் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின்படி 65 உக்ரைன் கைதிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. அப்போது, உக்ரைன் எல்லையில் உள்ள மேற்கு பெல்கோராட் என்ற இடத்தில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கி இருக்கிறது.

இந்த விமானத்தில் 65 போர்க் கைதிகளுடன் 6 விமான ஊழியர்களும் பயணித்திருக்கிறார்கள். ஆகவே, 74 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. விமானம் விபத்துக்குள்ளானபோது எடுத்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீடியோவில், விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதும், வலது இறக்கையில் முதலில் தீப்பற்றியது. பின்னர் விமானம் முழுவதும் தீப் பற்றி எரிகிறது. இதனிடையே, போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற விமானத்தை உக்ரைன் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய நாடாளுமன்ற சபாநாயகர் குற்றம்சாட்டி இருக்கிறார்.

Tags: russiaaccidentMilitary Flight74 killed
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடிக்கு கர்பூரி தாக்கூரின் பேத்தி நன்றி!

Next Post

ராமர் கோவில் விழா கொண்டாட்டம் – கல்வீச்சு, 144 தடையுத்தரவு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies