பகவான் ராமருடன் ஜெய்ப்பூர் மகாராஜா மூதாதையர் தொடர்புக் கொண்டவர்கள் என இன்ஸ்டாகிராம் பதிவை ஜெய்ப்பூர் அரச குடும்பம் வெளியிட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமரின் பிராண பிரதிஷ்டை, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் வெகு விமரிசையாக நடந்தேறியது. அயோத்தி ராமர் கோயில் பல்வேறு விதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாகக் காட்சியளித்தது. அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான விவிஐபிக்கள் அயோத்தி வந்தனர். மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் அயோத்தி ராமனை தரிசிக்க வந்துள்ளனர்.
இதற்கு மத்தியில், ‘சூரியவன்ஷி ராஜபுத்திரர்கள்’ என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூர் அரச குடும்பம், ராமரின் வழித்தோன்றல்கள் என்று கூறி, தங்கள் பரம்பரை தெய்வீக தொடர்பை உறுதிப்படுத்தி இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ளனர்.
இது குறித்து வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில்,
பகவான் ஸ்ரீ ராமரின் வரலாற்றுப் பரம்பரையைச் சேர்ந்த ‘சூர்யவன்ஷி’ ராஜபுத்திரர்கள்.
ஜெய்ப்பூர் மஹாராஜா சவாய் பத்மநாப் சிங், அந்த பரம்பரையின் 309 வது தலைமுறை, கோவிலில் உள்ள ஸ்ரீ ராமர் சிலையின் ‘பிரான்பிரதிஷ்தா’க்காக அயோத்தியில் உள்ள குடும்பத்தை பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
18 ஆம் நூற்றாண்டில் மகாராஜா சவாய் ஜெய் சிங் II ஒரு துறவியிடம் வாங்கியபோது, அயோத்தியின் குடும்பத்தின் ‘வன்ஷாவலி’ மற்றும் வரலாற்று வரைபடமும் துணியில் வரையப்பட்டிருக்கிறது. இந்த வரைபடம் தலைமுறை தலைமுறையாக குடும்பத்தால் பாதுகாக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.