இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.
இதன் முதல் போட்டி இன்று இந்தியாவில் தொடங்குகிறது. இன்று தொடங்கும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெறவுள்ளது.
இன்றையப் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 246 ரன்களை எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாக் க்ராலி மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர்.
12வது ஓவரில் பென் டக்கெட் 35 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஒல்லி போப் 1 ரன் மட்டுமே எடுத்து ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து தொடக்க வீரராக களமிறங்கிய ஜாக் க்ராலி 20 ரன்கள் அடித்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.
பின்பு ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். ஜோ ரூட் 29 ரன்களும், ஜானி பேர்ஸ்டோவ் 37 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் இங்கிலாந்து அணி 125 ரன்கள் எடுத்திருந்தது.
அப்போது களமிறங்கிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். பௌண்டரீஸ், சிக்சர்ஸ் என நடித்துக்கொண்டிருந்த பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.
பின்பு களமிறங்கிய டாம் ஹார்ட்லி 23 ரன்களில் ஆட்டமிழக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திர அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். இதில் ரோகித் சர்மா 3 பௌண்டரீஸ் என 24 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து சுப்மன் கில் களமிறங்கினார். சுப்மன் கில் 1 பௌண்டரி அடித்து 14 ரன்கள் எடுத்த நிலையில் காலத்தில் உள்ளார்.
மறுபக்கம் ஜெய்ஸ்வால் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பந்தை அதிரடியாக அடித்து 9 பௌண்டரீஸ், 3 சிக்சர்கள் என 70 பந்துகளில் 76 ரன்களை குவித்து களத்தில் உள்ளார்.
இங்கிலாந்து அணி சார்பில் ஜாக் லீச் ரோகித் சர்மாவின் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். முதல் நாள் முடிவில் இந்தியா 127 ரன்கள் பின்தங்கியுள்ளது