சமீபத்தில் Deep Fake தொழில்நுட்பத்தின் மூலம் உலகின் மிகவும் பிரபல நட்சத்திரமான பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் புகைப்படம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. டெய்லர் ஸ்விஃப்ட்டின் சில வெளிப்படையான மற்றும் ஆபாசமான AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.
கன்சாஸ் சிட்டி சீஃப்ஸ் விளையாட்டின் போது எடுக்க பட்ட டெய்லர் ஸ்விஃப்ட்டின் புகைப்படங்களை மிகவும் ஆபாசத்திற்குரிய வகையில் AI புகைப்படங்கள் வெளியாகின.
இது குறித்து விசாரணை மேற்கொண்டதில், டெய்லரின் பாலியல் படங்கள் செலிப் ஜிஹாத் என்ற இணையதளத்தால் உருவாக்கப்பட்டன, இது ஏ-லிஸ்டர்களின் பல போலியான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள Deep Fake ஆபாச தளமாகும். இந்த படங்கள் இணையதளத்தில் ஜனவரி 15 அன்று ‘டெய்லர் ஸ்விஃப்ட் சீஃப்ஸ் செக்ஸ் ஸ்கேன்டல் கேட் ஆன் கேமரா’ என்ற தலைப்பில் பகிரப்பட்டது.
மேலும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வைரலான நிலையில், இதன் மூலம் கடும் கோபத்திற்கு உள்ளான டெய்லர் ஸ்விஃப்ட்டின் ரசிகர்கள் இது குறித்து தங்களுக்கு கண்டனத்தை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் சில நெட்டிசென்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்கவும் புகைப்படங்களை ரிப்போர்ட் செய்தும் வருகின்றன . அதில் ஒரு ரசிகர் அணைத்து டெய்லர் ஸ்விஃப்ட் ரசிகர்களும் இதுபோன்ற புகைப்பட தளங்களை ரிப்போர்ட் செய்யுமாறு வலியுறுத்தி உள்ளார் , மேலும் அவர் எக்ஸ் தளத்தின் சிஇஓ எலன் மஸ்க்கிற்கும் சவால் விடுத்துள்ளார்.