75வது குடியரசு தின விழா, இன்று ( ஜனவரி 26 ) நாடுமுழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த குடியரசு தின விழாவை முன்னிட்டு 80 ஆயுதப் படை வீரர்களுக்கு வீரதீர செயலுக்கான விருதுகளை வழங்குவதற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதில் வீர மரணமடைந்த 12 வீரர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுகளில் 6 கீர்த்தி சக்ரா, 16 செளர்ய சக்ரா, 53 சேனா பதக்கங்களும் உள்ளது.
அசோக சக்ரா விருதுக்கு பிறகு நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த கேலண்ட்ரி விருதான கீர்த்தி சக்ரா விருதை மேஜர் திக்விஜய் சிங் ராவத் உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல்துறை அதிகாரிகளான மோகன் லால், அமித் ரெய்னா, ஃபரோஸ் அகமது தார் மற்றும் வருண் சிங் ஆகியோருக்கு சௌர்ய சக்ரா விருதுகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்படுகிறது.